விமான விபத்து நடந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பகவத் கீதை


விமான விபத்து நடந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பகவத் கீதை
x

மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது.

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் 1.39 மணியளவில் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர்.

புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்கள் உள்பட மேலும் சிலர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மொத்தம் 265 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விமான விபத்து நடைபெற்ற பகுதியில் இருந்து பகவத் கீதை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்து மதப்புத்தகமான பகவத் கீதை விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. விமானம் வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இந்த புத்தகம் எரியாமல் சிறிது சேதத்துடன் மீட்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story