10 நிமிடத்தில் டெலிவரி; சேவையை விரிவுபடுத்துகிறது அமேசான் நிறுவனம்

அத்தியாவசிய பொருட்களை வெறும் 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யும் நோக்கில் இந்த சேவை தொடங்கப்பட்டது.
10 நிமிடத்தில் டெலிவரி; சேவையை விரிவுபடுத்துகிறது அமேசான் நிறுவனம்
Published on

பெங்களூரு,

பிளிங்கிட், ஜெப்டோ போன்ற உடனடி டெலிவரி நிறுவனங்களுக்கு போட்டியாக அமேசானும் 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் வகையில் அமேசான் நவ் என்ற சேவையை தொடங்கியது. அத்தியாவசிய பொருட்களை வெறும் 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யும் நோக்கில் பெங்களூருவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டது.

இதற்கு வரவேற்பு பெருகி வரும் நிலையில், இந்த சேவையை மேலும் விரிவுபடுத்துகிறது. அதன்படி மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் குறிப்பிட்ட பகுதிகளில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் மளிகைப் பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என அமேசான் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com