தேவைப்பட்டால் வேளாண் சட்டங்களில் திருத்தம்; ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு

3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேவைப்பட்டால் வேளாண் சட்டங்களில் திருத்தம்; ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
Published on

இந்த தருணத்தில், மத்திய பிரதேச மாநில அரசு காணொலி காட்சி வழியாக நேற்று நடத்திய ஒரு நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, விவசாயிகளுடைய உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும், நாட்டின் எந்தவொரு இடத்திலும் விற்பனை செய்ய உதவவும்தான் வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டன. இதில் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், தேவைப்பட்டால் அவற்றை திருத்தவும் வெளிப்படையாக பேசவும் அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், எங்கள் அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, பொதுவான விவசாயிகளிடத்தில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையினால்தான், கொரோனாவுக்கு மத்தியிலும் விவசாயிகள் சாதனை அளவில் உற்பத்தி செய்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com