

புதுடெல்லி,
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதையடுத்து இந்தியா மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
மேலும் கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகள் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை இறுதி செய்வது குறித்தும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதிக்க அமெரிக்க குழு அடுத்த வாரம் வர உள்ளது.
பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க குழு வருகிற 1-ந்தேதி இந்தியாவுக்கு வருகிறது. இக்குழு 4-ந்தேதி வரை இந்திய அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளது. இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான சட்டரீதியான வாசகங்களை இரு தரப்பினரும் இறுதி செய்ய வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.