'இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும்' - ஜே.டி.வான்ஸ்


இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் - ஜே.டி.வான்ஸ்
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 23 April 2025 6:59 PM IST (Updated: 23 April 2025 7:00 PM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாத தாக்குதலில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜே.டி.வான்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவருடைய மனைவியும், இந்திய வம்சாவளி பெண்ணுமான உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் வந்துள்ளனர்.

இந்த சூழலில், காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜே.டி.வான்ஸ், "பயங்கரவாத தாக்குதலில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார். நானும் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளேன். இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும்" என்று தெரிவித்தார்.

1 More update

Next Story