மராட்டிய மாநிலம்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சோனியாவுடன் சுப்ரியா சுலே சந்திப்பு

மராட்டிய மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சோனியாகாந்தியை சரத்பவாரின் மகளான சுப்ரியா சுலே நேரில் சந்தித்தார்.
மராட்டிய மாநிலம்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சோனியாவுடன் சுப்ரியா சுலே சந்திப்பு
Published on

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

அங்கு உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மாதம்தோறும் ரூ.100 கோடி வசூலித்து தருமாறு இலக்கு நிர்ணயித்ததாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர்சிங் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுதொடர்பாக சுப்ரியா சுலே வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சோனியா காந்தி அவர்களே, உங்கள் மதிப்புமிக்க வழிகாட்டுதலுக்காக மிக்க நன்றி. உங்களுடன் பேசுவது எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியதில் சரத் பவாருக்கு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com