கர்நாடகாவில் பண்ணையில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு

கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள பண்ணையில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பண்ணையில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு
Published on

ஹாசன்,

கர்நாடகாவின் சில பகுதிகளில் குறைவான மழைப்பொழிவு மற்றும் உரங்களின் விலை உயர்வால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெங்களூரில் தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சிலர் பண்ணையில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோனி சோமனஹள்ளி கிராமத்தில் உள்ள பண்ணையில் 50-60 பைகளுடன் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர், ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளிகளை திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த நிலையில் பண்ணைக்கு வந்த விவசாயி தரணி, தக்காளி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் ஹலேபீடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 379-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com