புதிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்க தேசிய அளவில் குழு அமைக்கப்படும்: மந்திரி அமித் ஷா அறிவிப்பு

கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்காக “புதிய தேசிய கூட்டுறவு கொள்கை” உருவாக்கப்படுகிறது.
புதிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்க தேசிய அளவில் குழு அமைக்கப்படும்: மந்திரி அமித் ஷா அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் மூலம் கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்காக "புதிய தேசிய கூட்டுறவு கொள்கை" உருவாக்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்க தேசிய அளவில் குழு அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த தேசிய அளவிலான குழுவில், முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ் பிரபாகர் பிரபு தலைமையில் நாடு முழுவதிலும் இருந்து 47 உறுப்பினர்கள் இடம் பெறுவர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய கூட்டுறவுக் கொள்கையானது, கூட்டுறவுத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.

இதன் விளைவாக, கூட்டுறவுத்துறையானது, தன்னாட்சி, சுயசார்பு மற்றும் ஜனநாயக ரீதியாக செயல்படுகிறது. தற்போது இந்தியா முழுவதும் சுமார் 8.5 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில் 29 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்தக் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் துறை, பால் மற்றும் மீன் வளம், வீட்டுவசதி, நெசவு, கடன், சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய தேசிய கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்படுவதன் மூலம், நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையை வலுப்படுத்தி, அனைத்து தளத்திலும் விரிவாக்கம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com