ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலைமை குறித்து அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் டெல்லியில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலைமை குறித்து அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்
Published on

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் உயர்மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது.

டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ராணுவ தளபதி மனோஜ் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தின் தற்போதைய நிலைமை மற்றும் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்த உயர்மட்ட கூட்டம் கடந்த மே மற்றும் ஜீன் ஆகிய மாதங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com