பட்னாவிஸ், அஜித்பவாருக்கு அமித்ஷா வாழ்த்து

புதிய முதல்-மந்திரியாக பதவியேற்ற பட்னாவிஸ் மற்றும் அஜித்பவாருக்கு அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார்.
பட்னாவிஸ், அஜித்பவாருக்கு அமித்ஷா வாழ்த்து
Published on

மும்பை,

மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்-மந்திரி அஜித்பவார் இருவருக்கும் மத்திய உள்துறை மந்திரியும், பாரதீய ஜனதா தேசிய தலைவருமான அமித்ஷா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ள தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்ற அஜித்பவார் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மராட்டியத்தின் வளர்ச்சி மற்றும் நலனில் இந்த அரசாங்கம் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்றும், மாநிலத்தின் முன்னேற்றத்தின் தரநிலைகளை உருவாக்கும் என நம்புகிறேன் என தெரிவித்து உள்ளார். இதேபோல ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பாரதீய ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com