காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கவர்னருடன் அமித்ஷா ஆலோசனை

காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து அம்மாநில கவர்னருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கவர்னருடன் அமித்ஷா ஆலோசனை
Published on

ஸ்ரீநகர்,

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்ற அமித்ஷா அங்கு பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமித்ஷா பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள அமித்ஷா, இன்று அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக், உள்துறை ஆலோசகர் கே.விஜய்குமார், உள்துறை செயலர் ராஜிவ் கவ்பா, தலைமை செயலர் சுப்ரமணியம், வடக்கு பிரிவு ராணுவ தளபதி ரன்பிர் சிங், காவல்துறை மாநில தலைவர் தில்பாக் சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புல்வாமாவில் நடந்த தாக்குதலின்போது 40 துணை ராணுவத்தினர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் காஷ்மீரின் பாதுகாப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விளக்கம் அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com