தேர்தல் ஆணையத்தின் அன்றாட நடவடிக்கைகளில் அமித்ஷா தலையிடுகிறார் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தின் அன்றாட நடவடிக்கைகளில் அமித்ஷா தலையிடுவதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் அன்றாட நடவடிக்கைகளில் அமித்ஷா தலையிடுகிறார் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
Published on

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விபத்து காரணமாக காலில் காயம் ஏற்பட்ட மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களாக சர்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், மம்தா பானர்ஜி சர்க்கர நாற்காலியில் அமர்ந்தபடி இன்று பன்குரா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார கூட்டத்தில் பேசுவதற்கு முன் இந்து கடவுள் துர்க்கை அம்மன் மந்திரத்தை அவர் கூறினார். பின்னர் மம்தா கூறுகையில்,

உள்துறை அமைச்சர் நாட்டை நடத்துகிறாரா? அல்லது யாரை கைது செய்யவேண்டும் அல்லது அடிக்க வேண்டும் என முடிவு செய்கிறாரா? அல்லது எந்த துறை யாரை துரத்த வேண்டும் என முடிவு செய்கிறாரா?

தேர்தல் ஆணையத்தை நடத்துவது யார்? இதை அமித்ஷா நீங்கள் நடத்தவில்லை என நான் நம்புகிறேன். எங்களுக்கு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெற வேண்டும். அமித்ஷா தேர்தல் ஆணையத்தின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுகிறார்.

விவசாயிகள் 6 மாதமாக போராடி வருகின்றனர். ஆனால், அமைச்சர்கள் யாரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அனைத்து அமைச்சர்களும் மேற்குவங்காளத்தில் தான் உள்ளனர்.

அவர்கள் இங்கு ஓட்டல்களில் தங்கி இருந்துகொண்டு என்னை கொல்லவும், திரிணாமுல் காங்கிரசை அழிக்கவும், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக எவ்வாறு வழக்குப்பதிவு செய்வது என்பது குறித்து சதி செய்கின்றனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com