பாரத ரத்னா விருது குறித்து எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்ட அமித்ஷா

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
பாரத ரத்னா விருது குறித்து எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்ட அமித்ஷா
Published on

புதுடெல்லி,

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது, முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்ட மகத்தான மனிதர்கள் மீது நமது தேசம் வைத்திருக்கும் நன்றி உணர்வுக்கு ஒரு சான்றாகும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ள அமித்ஷா,

"புகழ்பெற்ற டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது, முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்ட மகத்தான மனிதர்கள் மீது நமது தேசம் வைத்திருக்கும் நன்றி உணர்வுக்கு ஒரு சான்றாகும். நமது தேசத்தின் உணவு நெருக்கடி காலத்தை, உணவுப் பாதுகாப்பு காலமாக மாற்றக்கூடிய கடினமான பணியை தனது அறிவியல் திறமையால் நிறைவேற்றிய ஒரு அரிய மேதையாக சுவாமிநாதனை நமது வரலாறு நினைவு கூர்கிறது.

சிறந்த கல்வியாளரான சுவாமிநாதனின் தேடல்கள் அற்புதமான ஆராய்ச்சிப் பணிகளுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், பாரம்பரியத்தைத் தொடர ஏராளமான அறிவார்ந்தவர்களை மற்றும் திறமையானவர்களை உருவாக்கியது. இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், உயரிய பாரத ரத்னா விருதால் அலங்கரிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவிற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com