முஸ்லிம்களின் குடியுரிமையை சிஏஏ பறிக்காது - உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாடு முழுவதும் வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த சட்டம் முஸ்லிம்கள் உட்பட யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லை என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
முஸ்லிம்களின் குடியுரிமையை சிஏஏ பறிக்காது - உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
Published on

 அகமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். ரூ.1,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். குஜராத்தில் தஞ்சம் அடைந்துள்ள 188 இந்து அகதிகளுக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கினார்.

பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்திய குடியுரிமை திருத்த சட்டம், லட்சக்கணக்கான அகதிகளுக்கு உரிமையும், நீதியும் அளிக்கிறது. இந்த சட்டம், இந்து, கிறிஸ்தவம், பவுத்தம், சமணம் ஆகிய மதங்களை சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பதற்கான சட்டம், இதில் யாருடைய குடியுரிமையும் பறிக்கக்கூடிய சட்டப்பிரிவு இல்லை என்று எனது முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களுக்காகத்தான் சட்டம் , சட்டத்திற்காக மக்கள் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று நாங்கள் 2014-ல் உறுதியளித்தோம். 2019-ல் மோடி அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலம், நீதி கிடைக்காத கோடிக்கணக்கான இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் நீதி பெறத் தொடங்கினர். இந்த சட்டம் 2019-ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகும் இது முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், யாருடைய குடியுரிமையையும் பறிக்க இந்தச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை" இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com