ராமர் கோவில் அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி ஆதித்யநாத் - விசுவ இந்து பரிஷத் யோசனை

ராமர் கோவில் அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரை சேர்க்க வேண்டும் என விசுவ இந்து பரிஷத் யோசனை தெரிவித்துள்ளது.
ராமர் கோவில் அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி ஆதித்யநாத் - விசுவ இந்து பரிஷத் யோசனை
Published on

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஒரு அறக்கட்டளையை அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளை அமைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்நிலையில், நேற்று அயோத்திக்கு சென்ற விசுவ இந்து பரிஷத் செய்தித்தொடர்பாளர் சரத் சர்மா, அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராமர் கோவில் அறக்கட்டளையில், விசுவ இந்து பரிஷத் ஆதரவு பெற்ற ராமஜென்மபூமி நியாசுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். அத்துடன், ராமஜென்மபூமி நியாஸ் தயாரித்த கட்டுமான திட்டப்படியே ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், நியாஸ் தயாரித்த மாதிரி ராமர் கோவிலை கடந்த 30 ஆண்டுகளாக ஏராளமானோர் பார்த்து பாராட்டி உள்ளனர்.

அறக்கட்டளையில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரையும் சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால், அவர்களை சேர்ப்பதற்காக, விதிவிலக்குகளை உருவாக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com