மேற்காசிய போர் குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டம் கூடுகிறது

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எரிசக்தி தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன.
மேற்காசிய போர் குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டம் கூடுகிறது
Published on

புதுடெல்லி,

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இன்றி நீடிக்கிறது. தங்களை தாக்கி வரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் ஈரான், மறுபுறம் ஹார்முஸ் நீரிணையையும் மூடி வைத்து இருக்கிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எரிசக்தி தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன.

மேற்காசிய போரால் நாட்டில் கியாஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்ட தாக சொல்லப்பட்டதை அடுத்து பெட்ரோலியத்துறை உயரதிகாரிகள் அதனை தீவிரமாக கண்காணித்து வினியோகத்தை நெறிமுறைப்படுத்தி னர். பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதாமல் தடுத்தனர். இது தொடர்பான சூழ்நிலைகளை நாள்தோறும் கண்காணித்து அரசின் உயர் அதிகாரிகள் மக்களுக்கு விளக்கி வருகிறார்கள்.

இதற்கிடையில் கடந்த 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் இது பற்றி மதிப்பாய்வு செய்வதற்காக உயர்மட்டக்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பெட்ரோலியப் பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்க ளின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய அரசாங்கம் முனைப் பான நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், மேற்காசிய போர் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து கொள்ள மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகப் பாதிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com