மத்தியபிரதேசம்; ஓடுபாதையிலிருந்து விலகிய விமானம் - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் விமானநிலையத்தில் இன்று நடைபெறவிருந்த விமான விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.
மத்தியபிரதேசம்; ஓடுபாதையிலிருந்து விலகிய விமானம் - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
Published on

புதுடெல்லி,

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் விமானநிலையத்தில் இன்று நடைபெறவிருந்த விமான விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.

ஏடிஆர் 72 ரக விமானம் ஒன்று இன்று காலை 11.32 மணிக்கு தலைநகர் டெல்லி விமான நிலையத்திலிருந்து ஜபல்பூர் விமானநிலையத்திற்கு புறப்பட்டது.

ஆனால் எதிர்பாராதவிதமாக, இன்று மதியம் ஜபல்பூர் விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானம், தரையிறங்கிய பின்னர் விமான ஓடுதளத்திலிருந்து விலகி மண் தரையில் சென்றது.

எனினும், இந்த சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக விமானம் விபத்துகுள்ளாகவில்லை. அதில் பயணித்த 55 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஓடுதளத்திலிருந்து விமானம் விலகி சென்ற சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com