

பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அரசு தீவிரமான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடும்படி உத்தரவிட்டுள்ளோம். அதே நேரத்தில் அத்தியாவசிய சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது.
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களுக்கு ரூ.266 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆக மொத்தம் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.616 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.