குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.
குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
Published on

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் இன்று நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பிற்பகல் 3.49 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

முன்னதாக லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள லே பகுதியில் இன்று பிற்பகல் 2.38 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com