லடாக்கில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.
லடாக்கில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
Published on

லே

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரின் கிழக்குப்பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.

அதேபோல்,சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லடாக்கில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com