மேகாலயாவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம்

மேகாலயாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேகாலயாவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம்
Published on

ஷில்லாங்,

மேகாலயாவின் வடக்கு காரோ மலைகள் உள்ள பகுதிகளில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 11.32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 25.87 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 90.70 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. முன்னதாக, மேகாலயாவில் நேற்று இரவு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com