

பெங்களூரு
கர்நாடக சட்டசபையில் பேசிய முதல்வர் குமாரசாமி கூறியதாவது:-
குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளதால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் என்னை நிர்ப்பந்தித்துள்ளார். ஆளுநர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் ஆளுநரின் இரண்டாவது காதல் கடிதம் என்னை காயப்படுத்தியுள்ளது. குதிரை பேரம் பற்றி 10 நாட்களுக்கு முன்புதான் அவருக்குத் தெரியுமா?
(எடியூரப்பா சுயேட்சை எம்.எல்.ஏ எச்.நாகேஷுடன் விமானத்தில் ஏறியதாகக் கூறப்பட்ட புகைப்படங்களை காட்டினார்). ஆனால், பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக நாங்கள் புகாரளித்த போது ஆளுநருக்கு தெரியவில்லையா?. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறினார்.