அரட்டை செயலியை பதிவிறக்கம் செய்த ஆனந்த் மஹிந்திரா


அரட்டை செயலியை பதிவிறக்கம் செய்த ஆனந்த் மஹிந்திரா
x

மெசேஜிங் செயலியில் பயனருக்கு என்னென்ன தேவையோ அத்தனை அம்சங்களையும் அரட்டை செயலி கொண்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான சோஹோ, ‘அரட்டை’ எனும் மெசேஜிங் செயலி மக்களிடையே அதிகம் கவனம் பெற்று வருகிறது. கடந்த 2021-ல் இந்த செயலியை சோஹோ தளம் வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த செயலி செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்த செயலியை அதிகளவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் டவுனோல்டு செய்து வருகின்றனர். இதன் டவுன்லோடு எண்ணிக்கை இப்போது நூறு மடங்கு வேகத்தில் உள்ளது.

அதாவது நாளொன்றுக்கு 3,000-லிருந்து 3.5 லட்சமாக டவுன்லோடு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இந்தச் செயலில் இந்தியாவில் வாட்ஸ்-அப் செயலிக்கான மாற்று என பலர் கருதுகின்றனர். வழக்கமாக ஒரு மெசேஜிங் செயலியில் பயனருக்கு என்னென்ன தேவையோ அத்தனை அம்சங்களையும் இந்த அரட்டை செயலி கொண்டுள்ளது. வீடியோ அழைப்புகள், டெக்ஸ்ட் மெசேஜ்கள், லொகேஷன் ஷேரிங், படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்ப, ஸ்டோரீஸ் உள்ளிட்ட அம்சங்களை இந்த செயலி கொண்டுள்ளது.

இந்த நிலையில், அரட்டை செயலியை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பதிவிறக்கம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அரட்டை செயலியை இன்று பதிவிறக்கம் செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story