"டாடா கார்களைப் பற்றிய உங்களின் உணர்வு என்ன ?" - வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் பதில்..!!

டாடா கார்களை பற்றி ஆனந்த் மஹிந்திரா அளித்துள்ள பதில் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.
Image Courtesy : PTI 
Image Courtesy : PTI 
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர். குறிப்பாக திறமைசாலிகளை கண்டறிந்து பாராட்டுவதோடு மட்டுமின்றி பலருக்கு உதவியும் செய்து வருபவர்.

அதே போல இந்தியாவில் முன்னணியில் உள்ள மற்றொரு வாகன தயாரிப்பு நிறுவனம் டாடா குழுமம். வாடிக்கையாளர்களை கவர்வதில் இந்த இரு நிறுவனங்களுக்கும் எப்போதும் போட்டி நிலவுவது வழக்கமாகும். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நபர் டுவிட்டரில் ஆனந்த் மஹிந்திரா-விடம் " டாடா கார்களை பற்றிய உங்களின் உணர்வு என்ன ? " என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ஆனந்த் மஹிந்திரா அளித்துள்ள பதில் இணையவாசிகளை கவர்ந்துள்ளது. ஆனந்த் மஹிந்திரா அளித்துள்ள பதில் டுவீட் ஒன்றில், " டாடா மோட்டார்ஸ் போன்ற வலுவான போட்டியாளர்கள் இருப்பது ஒரு பாக்கியம். அவர்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்வது எங்களை இன்னும் சிறப்பாகச் செயல்பட தூண்டுகிறது. போட்டி புதுமைகளைத் தூண்டுகிறது" என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com