காரின் பின் இருக்கையில் "சீட் பெல்ட் அணிவது கட்டாயம்" - ஆனந்த் மஹிந்திரா வலியுறுத்தல்!

காரின் பின் இருக்கையில் இருக்கும் போதும் சீட் பெல்ட் அணிவேன் என்று ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
காரின் பின் இருக்கையில் "சீட் பெல்ட் அணிவது கட்டாயம்" - ஆனந்த் மஹிந்திரா வலியுறுத்தல்!
Published on

மும்பை,

"காரின் பின் இருக்கையில் இருக்கும் போது கூட எனது சீட் பெல்ட்டை எப்போதும் அணிவதில் உறுதியாக உள்ளேன்" என்று ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.

மும்பை அருகே நேற்று நடந்த சாலை விபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்த நபர், திடீரென ஏற்பட்ட கார் விபத்தில், சீட் பெல்ட் அணியாமல் பயணித்த காரணத்தால் பலியான சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நாம் அனைவரும் நம்முடைய குடும்பங்களுக்கு கடன்பட்டிருக்கிறோம்" என்ற உறுதிமொழியை வெளியிட்டார். மேலும் அந்த உறுதிமொழியை நீங்கள் அனைவரும் எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சாலையில் பயணிக்கும் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும், தங்கள் பாதுகாப்பை முடிந்த அளவுக்கு உறுதி செய்ய வேண்டும் என்று பொருள்பட அவர் உறுதிமொழியை வெளியிட்டு, அனைத்து மக்களும் அதை பின்பற்ற கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com