விநாயகர் சிலைகள் கரைக்கும் விழா: அடுத்த வருடம் சந்திப்போம்... தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் டுவிட்டர் பதிவு!

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா விநாயகர் சதுர்த்தியின் நிறைவையொட்டி தனது தனித்துவமான வழியில் வாழ்த்தியுள்ளார்.
விநாயகர் சிலைகள் கரைக்கும் விழா: அடுத்த வருடம் சந்திப்போம்... தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் டுவிட்டர் பதிவு!
Published on

மும்பை,

விநாயகர் சதுர்த்தியின் நிறைவு நாளான நேற்று, வட மாநிலங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கும் விழா விமரிசையாக நடந்தது. இந்நிலையில் இன்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இன்று விநாயக சதுர்த்தியின் நிறைவையொட்டி தனது தனித்துவமான வழியில் வாழ்த்தியுள்ளார்.

ஒரு யானைக் குட்டி தனது தும்பிக்கையை சுழற்றிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் டுவிட்டரில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில், "கணபதி பப்பா, தனது தும்பிக்கையை காட்டி நம்மிடம் இருந்து விடைபெறுகிறார் என்று நான் நினைக்கிறேன்.. அடுத்த வருடம் சந்திப்பேம்" என்று பதிவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com