அந்தமான், நிகோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.52 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திக்லிபூரில் இருந்து வடக்கே 147 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய புவியியல் மையம் தனது டுவிட்டரில், ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற புள்ளிக் கணக்கில் இன்று அதிகாலை 2.52 மணிக்கு அந்தமான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது திக்லிபூர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வடக்கே 147 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com