ஆந்திரா: கோதாவரி ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு


ஆந்திரா: கோதாவரி ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் குளிக்கச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இன்று காலையில் தல்லபுடி மண்டலத்தில் உள்ள தடிபுடி கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் கோதாவரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். அவர்கள் சிவராத்திரியை முன்னிட்டு ஆற்றில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் காலை 8.30 மணியளவில் அவர்களில் 5 பேர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story