ஆந்திரா: பனங்கள் குடித்த முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடு

முதல் - மந்திரியே தங்களது வீட்டிற்கு வந்து பணத்தை வழங்கியதால் சிம்மாசலத்தின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடு
Published on

திருப்பதி,

நேரடியாக களமிறங்கினார்

ஆந்திராவில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முதியோர் மற்றும் கைவிடப்பட்டோருக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகை ரூ. 3,000-லிருந்து ரூ. 4,000 ஆக உயர்த்தப்பட்டது. ஜூன் 2026 மாதத்திற்கான இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதிய விநியோக திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கவே முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடு நேரடியாக களமிறங்கினார்.

மகிழ்ச்சி

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், துனி அடுத்த சாமவரம் கிராமத்திற்கு முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடு எளிய மக்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று ஓய்வூதிய தொகையை வழங்கும் திட்டத்தின் கீழ், கள்ளு இறக்கும் தொழிலாளியான சிம்மாசலம் என்பவரின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு ரூ. 4,000 ஓய்வூதிய தொகையை நேரில் வழங்கி, அவரது குடும்பத்தினரின் வாழ்வாதார நிலை குறித்துக் கேட்டறிந்தார். முதல் - மந்திரியே தங்களது வீட்டிற்கு வந்து பணத்தை வழங்கியதால் சிம்மாசலத்தின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

பனங்கள்

அப்போது சிம்மாசலமின் மருமகன் முசலையா என்பவர் பனை மரத்தில் ஏறி பாரம்பரிய முறைப்படி கள்ளை கீழே இறக்கினார். மரம் ஏறும் தொழில் மற்றும் அதில் உள்ள சவால்களை கேட்டறிந்த முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடு, மரத்திலிருந்து புதிதாக இறக்கப்பட்ட கள்ளையும் நேரில் சுவைத்துப்பார்த்தார்.

உத்தரவு

சிங்கசாலத்தின் கோரிக்கையை ஏற்று, அந்த குடும்பத்திற்கு ஒரு உறுதியான வீட்டை கட்டி தருமாறு அதிகாரிகளுக்கு முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com