எதிர்ப்பு வலுத்ததால் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் அப்துல்கலாம் பெயரில் விருது அறிவிப்பு

எதிர்ப்பு வலுத்ததால் தனது தந்தை பெயருக்கு மாற்றி அறிவித்த விருதை ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் அப்துல்கலாம் பெயரில் அறிவித்து உள்ளார்.
எதிர்ப்பு வலுத்ததால் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் அப்துல்கலாம் பெயரில் விருது அறிவிப்பு
Published on

விசாகபட்டினம்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஏபிஜே அப்துல்கலாம் பிரதிபா புராஸ்கர் என்று வழங்கப்பட்டு வந்த விருதின் பெயரை ஒய்.எஸ்.ஆர் வித்யா புராஸ்கர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவம்பர் 11 ஆம் தேதி இந்த விருது வழங்கப்படும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆந்திர பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு விருதுகள், உயர்படிப்புக்கான கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அப்துல்கலாம் பிரதிபா புராஸ்கர் பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருதின் பெயர், ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் பெயராக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் டுவிட்டரிலும் #YSRCPInsultsAPJAbdulKalam என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு வலுக்கவே, அரசாணையை ரத்து செய்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். முன்னதாக இருந்த, கலாம் பெயரிலே மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒய்.எஸ்.ஆர் வித்யா புராஸ்கர் மீண்டும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிரதிபா வித்யா புராஸ்கர் என்று அழைக்கப்படும் என்று கூறி மாநில கல்வித் துறை திங்கள்கிழமை இந்த உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com