

அமராவதி,
ஆந்திராவில் 5 பேர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமுதாயத்திற்கு ஒருவர் என 5 பேரை துணை முதலமைச்சராக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நியமிக்க உள்ளார். இவர்கள் 5 பேரும் நாளை பதவி ஏற்கிறார்கள். துணை முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என 24 பேர் நாளை காலை 9.15 மணிக்கு பதவி ஏற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.