ஆட்டோ டிரைவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 15 ஆயிரம் நிதியுதவி: ஆந்திர முதல்-மந்திரி தொடங்கி வைக்கிறார்...!


ஆட்டோ டிரைவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 15 ஆயிரம் நிதியுதவி: ஆந்திர முதல்-மந்திரி தொடங்கி வைக்கிறார்...!
x

ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார்

அமராவதி,

ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார்

இந்நிலையில், ஆந்திராவில் ஆட்டோ டிரைவர்கள், கார் டிரைவர்களுக்கு நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி, ஆட்டோ, கார் டிரைவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆண்டுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை முதல்-மந்திரி நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 90 ஆயிரம் ஆட்டோ, கார் டிரைவர்கள் பயனடைய உள்ளனர். ஆண்டுக்கு தலா ரூ. 15 ஆயிரம் பணம் தகுதியுடைய பயனாளர்களான ஆட்டோ, கார் டிரைவர்களின் வங்கி கணக்குகளுக்கு மாநில அரசு மூலம் நேரடியாக செலுத்தப்படுகிறது.

1 More update

Next Story