

அமராவதி,
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற பேருந்தை பணிமனைக்கு ஓட்டிச் சென்றபோது, அந்த பேருந்தின் இன்ஜினில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் சில வினாடிகளில் பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் முன்னரே இறக்கிவிடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பேருந்தில் தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.