

புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திராவின் காங்கிரஸ் பொறுப்பாளராக முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டியை நியமனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தி தலைமையில் கட்சியின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் முழு பொறுப்பாளராகவும், பொதுசெயலாளராகவும் உம்மன்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த பொறுப்பில் திக்விஜயசிங் இருந்தார்.
இதே போல் மேற்கு வங்க பொறுப்பில் இருந்த ஜி.பி., ஜோஷி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மேற்கு வங்க காங்கிரஸ் பொறுப்பாளராக கவுரவ் கோகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளையும் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் உடனடியாக அமுல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.