ஆந்திராவில் தனியார் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

தீ விபத்தின்போது தொழிற்சாலையில் யாரும் இல்லாத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
அமராவதி,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பரவாடாவில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் 100 அடி உயரத்திற்கு கரும்புகை எழும்பியது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் பெரும் போராட்டத்திற்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தின்போது தொழிற்சாலையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






