பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்த ஆந்திர மந்திரி ரோஜா..!

பிரதமர் மோடியுடன் ஆந்திர மந்திரி ரோஜா செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்த ஆந்திர மந்திரி ரோஜா..!
Published on

ஆந்திரா,

ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாளின் ஓராண்டு கால விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 30 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து டிஜிட்டல் இந்தியா பாஷினி", "டிஜிட்டல் இந்தியா ஜெனசிஸ்" உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மேடி, மை ஸ்கீம், மேரி பெஹச்சான் ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியுடன் ஆந்திர மந்திரி ரோஜா செல்பி எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உடனிருந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com