

காக்கிநாடா
ஆந்திர பிரதேசத்தில் காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்த நிலையில், இன்று அந்த பட்டாசு ஆலையில் பலத்த சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். எரிந்து கொண்டிருக்கும் தீயை போராடி அணைத்து வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திராவில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.