ஆந்திர பிரதேசம்: பாய்லர் வெடித்து 4 பேர் பலி; 10 பேர் காயம்

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர பிரதேசம்:  பாய்லர் வெடித்து 4 பேர் பலி; 10 பேர் காயம்
Published on: 

திருப்பதி

ஆந்திர பிரதேசத்தில் பாய்லர் வெடித்து 4 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர்.

ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் தடா நகரில் உள்ள ஸ்ரீ சிட்டி பகுதியில் மருந்து தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பாய்லர் வெடித்தது.

4 பேர் பலி

இந்த சம்பவத்தில், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். பாய்லர் வெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும், போலீசார் மற்றும் அவசரகால துறையை சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக சென்றனர். இதில், படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆந்திர பிரதேச தொழில் துறை மந்திரி நர லோகேஷ் மீட்புப்பணிகளை விரைவுபடுத்தும்படி உத்தரவிட்டார். தேவையான சிகிச்சையை வழங்கும்படியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com