ஆந்திரா; லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் பலி

சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா; லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் பலி
Published on

திருப்பதி,

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் குடி பண்டா மற்றும் அமரபுரம் பகுதியை சேர்ந்த 14 பக்தர்கள் வாடகை வேனில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று இரவு வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். மடக சிரா புல்ல சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்துக்கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு இந்துபுரம் மற்றும் பெங்களூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து குடிபண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com