ஆந்திரா: கோவில் சுவர் இடிந்து விழுந்து பக்தர்கள் 9 பேர் உயிரிழப்பு


ஆந்திரா: கோவில் சுவர் இடிந்து விழுந்து பக்தர்கள் 9 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 30 April 2025 7:47 AM IST (Updated: 30 April 2025 11:24 AM IST)
t-max-icont-min-icon

கோவிலுக்கு வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு முதல் தரிசனத்திற்காக அதிகாலையில் பல பக்தர்கள் வந்திருந்தனர்.

இந்த நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கோவிலின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் சில பக்தர்களை மீட்புக்குழுனர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவில் தரிசனத்திற்காக வந்தவர்கள் தற்போது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story