

ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மும்மடிவரம் பகுதியில் உள்ள ஆற்றில் 40-க்கும் மேற்பட்டோருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் 10 குழந்தைகளும் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. படகு கவிழ்ந்ததில், நீரில் தத்தளித்த 10 பேரை அருகாமையில் உள்ளவர்கள் மீட்டனர். எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.