ஆந்திரா அமைச்சரவை மாற்றம்: அமைச்சர் ஆகிறாரா நடிகை ரோஜா..?

ஆந்திர மாநில சட்டப்பேரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
ஆந்திரா அமைச்சரவை மாற்றம்: அமைச்சர் ஆகிறாரா நடிகை ரோஜா..?
Published on

ஆந்திரப் பிரதேசம்,

ஆந்திர மாநில சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் மாநில நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் ரெட்டி ரூ 2.56 லட்சம் கோடியில் 2022-23-ம் ஆண்டுக்கான வருவாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டை துவக்கினார்.

பட்ஜெட் உரைக்குப் பின்னர் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பேசுகையில், இந்த பட்ஜெட்டால் அனைத்து தரப்பினரும் வளம் பெறுவார்கள். விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும். இதில் அமைச்சர் பதவிகள் பறிபோனவர்கள் வருத்தப்படக்கூடாது. அவர்களுக்கு மாநில பொறுப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஜெகன்மோகன் ஆட்சி பொறுப்பேற்றதும் அமைச்சர் பதவி இரண்டரை ஆண்டுகள் மட்டுமே. அதன் பிறகு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இதனிடையே ஏப்ரல் மாதம் முதல் ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட உள்ளது . ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அமைச்சர் கட்டாயமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதன்படி சித்தூர் மாவட்டத்தில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com