ஆந்திர பிரதேசம்: வீடு மீது கார் மோதல்; மருத்துவ மாணவர்கள் உள்பட 6 பேர் பலி

ஆந்திர பிரதேசத்தில் விபத்தில் பலியான 6 பேரில், 5 பேர் நாராயணா மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.
ஆந்திர பிரதேசம்: வீடு மீது கார் மோதல்; மருத்துவ மாணவர்கள் உள்பட 6 பேர் பலி
Published on

நெல்லூர்,

ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் பொத்திரெட்டிபாளையம் பகுதியில் கார் ஒன்று விரைவாக சென்றது. அது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீடு ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இதுபற்றி பொத்திரெட்டிபாளையம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் சுதாகர் ரெட்டி கூறும்போது, இந்த விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில், 5 பேர் நாராயணா மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என தெரிய வந்துள்ளது என்றார்.

இந்த விபத்தில் பலியான மற்றொரு நபர், கார் விபத்து ஏற்படுத்தியபோது, கடையருகே நின்றிருந்த ரமணய்யா என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார். தொடர்ந்து விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com