

விஜயவாடா,
மாநிலங்களில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசு பணிக்கு அழைத்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கான பணிவிதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதை பல்வேறு மாநில அரசுகளும் எதிர்த்துள்ளன.
இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில், மாநில அரசு அதிகாரிகளை தேவைப்படும்போது மத்திய அரசு அழைத்துக்கொள்வதை வரவேற்கிறேன். ஆனால் யார் யாரை மத்திய அரசுப் பணிக்கு அனுப்புவது என்பது குறித்து மாநில அரசுதான் சரியாக முடிவெடுக்க இயலும்.
எனவே, இதுதொடர்பான முன்மொழிவை மறுபரிசீலனை செய்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப்பணிக்கு செல்வதற்கு மாநில அரசின் தடையில்லா சான்று அவசியம் என்ற தற்போதைய நிலையை தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.