ஆந்திரா பட்டாசு ஆலை வெடி விபத்து: பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டத்தின் கைலாசப்பட்டினம் பகுதியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பெண் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ஆந்திராவின் அனகாப்பள்ளி மாவட்டத்தில் நடந்த தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com