சிறுவர், சிறுமிகளுக்கு அதிக தடுப்பூசி போட்டதில் ஆந்திரா முதலிடம்

இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்-சிறுமியருக்கு கடந்த 3-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சிறுவர், சிறுமிகளுக்கு அதிக தடுப்பூசி போட்டதில் ஆந்திரா முதலிடம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்-சிறுமியருக்கு கடந்த 3-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் அனைத்து மாநிலங்களும் தீவிரமாக தடுப்பூசி போட்டு வருகின்றன. நேற்று மாலை நிலவரப்படி 85 லட்சத்துக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் அதிக தடுப்பூசி போட்ட மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்து உள்ளது.

அங்கு மொத்தமுள்ள 15-18 வயது பிரிவினரில் 39.8 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். அடுத்ததாக இமாசல பிரதேசம் (37 சதவீதம்), குஜராத் (30.9) மாநிலங்கள் உள்ளன.தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டையூ-டாமன் யூனியன் பிரதேசம் 28.3 சதவீதமும், கர்நாடகா 25.3 சதவீதமும், உத்தரகாண்ட் 22.5 சதவீதமும், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார் முறையே 20.6, 20.5 சதவீதமும் தடுப்பூசி போட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com