ஆணவ கொலைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

காதல் திருமணம் செய்து கொண்ட சவுடேஸ்வரி வயது வந்தவர் என்று தெரிந்தபோதிலும் அவரை பலவந்தமாக பெற்றோரிடம் வெங்கட்ரமணா ஒப்படைத்தார்.
ஆணவ கொலைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
Published on

அமராவதி,

ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர் லாவை சேர்ந்த வியாபாரி சந்திர சீனு. இவரது மகள் சவுடேஸ்வரி (வயது 22) மற்றொரு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதை தாங்க முடியாமல் இருந்த சந்திரசீனு, தன் மகளை ஆணவ கொலை செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த ஆணவ கொலைக்கு, மாசர்லா நகர இன்ஸ்பெக்டர் வெங்கட்ரமணா உடந்தையாக இருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையெடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

காதல் திருமணம் செய்து கொண்ட சவுடேஸ்வரி, வயது வந்தவர் என்று தெரிந்தபோதிலும் அவரை பலவந்தமாக பெற்றோரிடம் வெங்கட்ரமணா ஒப்படைத்தார். சந்திர சீனு அதற்காக வெங்கட்ரமணாவுக்கு பெரிய அளவில் பணம் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராவ் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com