ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 845 பேருக்கு கொரொனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 845 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 845 பேருக்கு கொரொனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை
Published on

அமராவதி,

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.ஆந்திராவில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,252 ஆக உள்ளது

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் மேலும் 845 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,097 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 5 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 8,586 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை மாநிலத்தில் 7,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com