ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மிக அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,555 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,06,790 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் கொரோனாவால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,900 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திரா முழுவதும் இன்று ஒரேநாளில் 7,485பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,43,993 க உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது வரை 56,897 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com