ஆந்திராவில் இன்று மேலும் 14,440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆந்திராவில் இன்று மேலும் 14,440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவீர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இன்று ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று மேலும் 14,440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,80,634 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 3,969 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 20,82,482 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் 14,542 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 83,610 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்..

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com